தாய்லாந்தின் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் நேற்று (22) அமுலாகிறது.அதன்படி, இன்று 180 ஒரே பாலின ஜோடிகள் திருமாணம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த ஆண்டு, தாய்லாந்தின் ஓரினச்சேர்க்கை திருமண சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலின தம்பதிகள் இப்போது திருமணம் செய்து கொள்ளவும், நிர்வகிக்கவும், தங்கள் சொத்துக்களைப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.