மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின.நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 350இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் மியான்மர் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்