பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஓர் நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது” என்று தெரிவித்தார்.