21 மாசி 2025 அன்று பிரித்தனியாவில்லுள்ள 15 கேவென்டிஷ் சதுக்கத்தில் நடைபெற்ற, பாடகி யோஹானியின் இசை நிகழ்விற்கு எதிராக தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யோஹானியின் தந்தையான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா அறிக்கையில் பெயரிடப்பட்ட 55 ஆவது பிரிவிற்கு தலைமை தாங்கியுள்ளார். அதனாலேயே யோஹானிக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.