பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குக் கையடக்கத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் பிரித்தானிய தகவல் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்த அதிகார சபையின் சமீபத்திய ஆய்வில், 5 முதல் 7 வயதுடைய பிரித்தானிய குழந்தைகளில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் திறன்தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.எனவே, குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் அழைப்புகளைப் பெறுவதற்கும் குறைந்த திறன் கொண்ட தொலைபேசிகளை மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அவ் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் கூடிய தொலைபேசிகளை வழங்குவதற்கும், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள் மேற்கொள்வதற்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.