உலக மக்கள் தொகை நாளை (01) புத்தாண்டு தினத்தில் 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்றையதினம் (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியனாக காணப்பட்டது. 2023ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் தொகை உயர்ந்த நிலையில் இந்த வருடம் (2024) மக்கள் தொகை 0.9% குறைவாக உள்ளது.மேலும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரைப் புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும்.ஜனவரி 2025ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 செக்கனுக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 செக்கனுக்கும் ஒரு இறப்பும் ஏற்படும். வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 செக்கனுக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாகச் சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.