சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19ல் பூமிக்கு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு, நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் ஆய்வு பணிக்காக சென்றார். ஆனால், அவர் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் 8 மாதங்களாக விண்வெளியில் அவர் சிக்கி உள்ளார்.இந்நிலையில், அவர் மார்ச் 19 ம் தேதி பூமிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் விண்வெளிக்குச் சென்ற புட்ச் வில்மோரும் உறுதி செய்துள்ளனர்.மார்ச் 12 ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு 10 மார்ச் 12ல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கிளம்புகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைப்பானதும், அதில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார்.தற்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். அந்த பொறுப்புகளை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து, அவர் மார்ச் 19ல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்புகிறார்.