மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளன.இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.