அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மெட்டா நிறுவனம் மோசடி செய்தால், முகப்புத்தக நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) தனது வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டியேற்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.