Wednesday, March 12, 2025
Homeஉலகம்ராட்சத முதலைக்கு வெறும் கைகளால் உணவளித்த வாலிபர்

ராட்சத முதலைக்கு வெறும் கைகளால் உணவளித்த வாலிபர்

சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான விலங்குகளையும் கூட சில நாடுகளில் அனுமதி பெற்று வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். என்னதான் செல்லப்பிராணி போல அவற்றை வளர்த்தாலும் திடீரென அவை ஆவேசமாகி விடும். அதுபோல முதலையின் ஆக்ரோஷமும் பயங்கரமாக இருக்கும்.நீரிலும், நிலத்திலும் வசிக்கும் தன்மை கொண்ட முதலை திடீரென ஆவேசமாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாவது உண்டு. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராட்சத முதலைக்கு தனது வெறும் கைகளால் பயமின்றி உணவு அளிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில், நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது. அப்போது பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர் தனது வெறும் கைகளால் அந்த ராட்சத முதலைக்கு உணவு அளிக்கிறார். அவரிடம் முதலை அடக்கமாக நடந்து கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.ஒரு பயனர், முதலைக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டார். அதே நேரம் சில பயனர்கள், நன்கு பயிற்சி பெற்ற காட்டு விலங்குகளின் நடத்தையில் சில நேரங்களில் கணிக்க முடியாது என எச்சரித்தனர். மேலும் சில பயனர்கள், தங்கள் பதிவில் இதுபோன்ற சாகசங்கள் முட்டாள்தனமானது என விமர்சித்தனர்.

இதையும் படியுங்கள்:  சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படும் திகதியை அறிவித்தது நாசா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!