வட்ஸ்அப் செயலியின் சேவை இன்று உலகளாவிய ரீதியில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ அல்லது நிலைகளைப் (status) பதிவேற்றவோ முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், “கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்தனர்” என்று தெரிவித்துள்ளது.