Home » உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்

by newsteam
0 comments
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் உட்பட, கொழும்பு மாவட்ட மத்திய குழுவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கமிட்டியினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!