உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் மேலும் நீட்டிக்கப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.