Home » ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை

ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை

by newsteam
0 comments
ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை

மருத்துவமனைக்குள் மருத்துவரின் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது வழக்கு ஒன்றினை மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் இன்று(27.01.2025) காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணை இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

ஒரு சில தினங்களிற்கு முன்னர் வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் கடலில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றின்போது காயமடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந் நபரை பார்வையிடுவதற்க்காக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று மருத்துவமனை உத்தியோகத்தர்களிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர்கள் பார்வை நேரத்திற்கு முன் விடுதியில் நோயாளர்களை பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பொறுப்பு மருத்துவரின் அனுமதியை பெற்று காயமடைந்த நபரை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் சக ஊடகவியலாளர் ஒருவருடன் மருத்துவ மனை பொறுப்பு மருத்துவரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

My Image Description

இந்நிலையில் பொறுப்பு மருத்துவ மருத்துவர் ஊடகவியலாளர்களுக்கு பார்வை நேரத்திற்கு முன் பார்வையிட அனுமதிக்காத நிலையில் வளாகத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.இந்நிலையிலும் ஊடகவியலாளர்கள் தந்திரோபாயமாக மாற்று வழிகளை பயன்படுத்தி கடலில் காயமடைந்தவர் தொடர்பான செய்தியை மருத்துவ மனையின் விடுதியில் தங்கியிருந்த புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தனர்.

குறித்த செய்தியை பார்வையிட்ட. பொறுப்பு மருத்துவர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் க்கு எதிராக முறைப்பாடு தெரிவித்திருந்தார்.குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று 27.01.2025 இரண்டு மணிநேரம் மரியசீலன் திலெக்ஸ் மீது விசாரணைகள் இடம் பெற்றது.இது குறித்து கருத்து தெரிவித்த பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலேக்ஸ் தானும் தனது சக ஊடகவியலாளரும் குறித்த சம்பவ தினத்தில் செய்தி சேகரிப்பதற்க்கு மருத்துவ மனை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்ததாகவும், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தாம் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகவும் மருத்துவர் குற்றம் சாட்டியது போன்று எதுவும் இடம் பெறவில்லையென்றும், தாம் மருத்துவர் அனுமதி மறுக்கப்பட்டதால் தாம் நாகரீகமாக வெளியேறியதாகவும் தெரிவித்தார்.மருத்துவரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று சக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!