Home » ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு

ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு

by newsteam
0 comments
ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். செலவின குறைப்பு நடவடிக்கையாக இத்தகைய முடிவுகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்தது.ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தொழிலாளர் அமைப்புகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் கோர்ட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெரிய அளவிலான பணி நீக்கத்தை, மோசமான செயல் திறன் எனக் கூறி நியாயப்படுத்துவது சட்டப்பூர்வ தேவைகளை தவிர்ப்பதற்கான ஒரு போலி முயற்சி என்றும் நீதிபதி சாடியிருக்கிறார். அமெரிக்க கோர்ட்டின் இந்த உத்தரவு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் மேற்கொண்ட் நடவடிக்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!