Home » எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஏமனில் 74 பேர் பலி

எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஏமனில் 74 பேர் பலி

by newsteam
0 comments
எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஏமனில் 74 பேர் பலி

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்றது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்நிலையில், ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து, ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகவும், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!