Site icon Taminews|Lankanews|Breackingnews

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.நேற்று முன் தினம் இரவு (4) தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் (4) கவிழ்ந்ததில் தங்காலை நகர சபை செயலாளர், 12 நகர சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தமை முழு நாட்டையுமே துயரத்தி ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version