லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி டெலிகிராமில் இருந்து நீக்கம்

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டடார். அந்த செயலியில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களை அந்த செயலி தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் விடப்பட்டார்.ஆனாலும் அவர் பிரான்ஸை விட்டு வெளியேறக் கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளார். பாவெல் துரோவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஜாமின் தொகையாக நீதிமன்றத்தில் ஐந்து மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் டெலிகிராம் செயலில் இருந்து தனிநபர்களின் லொகேஷன்களை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த டெலிகிராம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here