2 விண்வெளி வீரர்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவிப்பு

சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள 2 நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.

அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் அவர்கள் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.எனினும் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்தநிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here