Home » ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

by newsteam
0 comments
ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த கொடுப்பனவு ஏற்கனவே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உட்பட கொடுப்பனவுகளும் இந்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அஸ்வெசும நலன்புரி பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 17 லட்சத்து 37 ஆயிரத்து 141 குடும்பங்களுக்கு 12.63 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தக் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 580,944 முதியோர்களின் கணக்குகளில் 2.9 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை மேலும் தெரிவிக்கிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!