Home » ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம்

ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம்

by newsteam
0 comments
ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம்

மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஸ்டார்லிங்க் எலான் மஸ்க் இணைய சேவை ஏர்டெல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!