இளைஞர்கள் பலர், இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக, வீர சாகசம் என்று நினைத்துக்கொண்டு சில முட்டாள்தனமான விஷயங்களை செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் செல்ஃபி கலாச்சாரம் ஆரம்பித்த போது இப்படித்தான், பல உயிர்கள் ஆபத்தான நேரங்களில் செல்ஃபி எடுக்கப்போய் மாய்ந்தன. தற்போது, இங்கு ஒரு இளைஞர் அதிவேகமாக ஓடும் ரயிலுக்கு கீழ் படுத்துக்கொண்டு, வீடியோ எடுத்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாம் பல படங்களில் பார்த்திருப்போம், ரயிலாே அல்லது அதிகவேகமாக வரும் பெரும் வாகனமாே வரும் போது, அதில் அடிபடாமல் இருக்க அந்த படத்தில் இருப்பவர்கள் வாகனத்திற்கு அடியில் படுத்துக்கொள்வதுண்டு. சில காட்சிகளில், ஓடும் ரயிலுக்கு அடியில் குழந்தை மாட்டிக்கொள்வது போலவும், ரயில் போன பின்பு சிலர் அந்த குழந்தையை தூக்குவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கும். இதை உண்மையா என்று உறுதி செய்யவும் சிலர் விபரீத விளையாட்டுகளில் இறங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அந்த வகையில், இங்கும் ஒரு நபர் ரயிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு படம் பிடித்திருக்கிறார்.வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த நபர் தன் முகத்தை காட்டியவாறு விதவிதமான கோணங்களில் வீடியோ எடுத்திருக்கிறார். ரயில் போன பின்பு, அவர் கேமராவை பார்த்து சிரிக்க வேறு செய்கிறார். இந்த வீடியோ, எங்கு யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை அப்லோட் செய்திருப்பவர், பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ஆவார். இவர், “இந்த முட்டாளை பாருங்கள். சிலரை கவர்வதற்காக தன் உயிரை பணயம் வைக்கிறான்” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு கீழ் நெட்டிசன்கள் பலர் விதவிதமான சந்தேகத்தை கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் குறிப்பாக, “ரயில் வரும் நேரத்தில் அந்த இளைஞருக்கு விரைப்பு ஏற்பட்டால் என்ன செய்வார்?” என்று கேட்டிருக்கிறார். ரயில் கடக்கும் போது கீழே படுத்துக்கொண்டால் என்ன ஆகும்?
ரயில் கடக்கும் போது அதற்கு கீழ் படுத்துக்கொள்வது மரணத்துடன் விளையாடுவது போன்றது என ஒருவர் அந்த கமெண்ட் செக்ஷனில் கூறியிருக்கிறார். அவர், “ரயில்களில் இழுவைப் காலணிகள் பொருத்தப்பட்டிருக்கும் போது, ஒரு நபர் தண்டவாளத்தில் தட்டையாகப் படுத்துக்கொண்டு காயமின்றிப் போக முடியாது. இந்த இணைப்புகள் பொதுவாக தண்டவாள மேற்பரப்பிலிருந்து 6 முதல் 10 அங்குலங்கள் (15 முதல் 25 செ.மீ) உயரத்தில் தொங்குகின்றன, மேலும் ரயிலின் பாதையில் நேரடியாக குப்பைகளை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. சராசரி வயது வந்த மனித மார்பு (படுக்கையில் முன்னும் பின்னும் அளவிடப்படுகிறது) உடல் வகையைப் பொறுத்து சுமார் 8 முதல் 10 அங்குலங்கள் (20 முதல் 25 செ.மீ) ஆழத்தைக் கொண்டுள்ளது. இது துடைப்பான்கள் மற்றும் பிரேக் அசெம்பிளிகள் அல்லது இழுவைப் பற்றும் கியர் (பெரும்பாலும் 9 முதல் 12 அங்குலங்கள் (23 முதல் 30 செ.மீ) வரை தொங்கும்) போன்ற பிற தாழ்வான தொங்கும் உபகரணங்களின் இடைவெளிக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பதால், ஒரு நபரின் உடல் கிடைக்கக்கூடிய செங்குத்து இடத்திற்குள் பொருந்தாது.
சுருக்கமாகச் சொன்னால், அத்தகைய இணைப்புகள் இருக்கும்போது தண்டவாளங்களுக்கு இடையில் படுத்துக்கொள்வது உயிர்வாழ முடியாது, சக்கரங்கள் இடத்தை அடைவதற்கு முன்பே அவை உடலைத் தாக்கும் அல்லது நசுக்கும். இது பெரும்பாலான நவீன ரயில்களுக்கு, குறிப்பாக சுரங்கப்பாதைகள், இலகுரக ரயில் மற்றும் பராமரிப்பு பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு பொருந்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.