Home » ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு

by newsteam
0 comments
ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு

அடுத்த வருடத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 9 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படும்.அதேநேரம், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 7ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!