Home » கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா மதுபானத்துடன் புத்தளம் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா மதுபானத்துடன் புத்தளம் வர்த்தகர் கைது

by newsteam
0 comments
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா மதுபானத்துடன் புத்தளம் வர்த்தகர் கைது

விமான பயணம் செய்யாது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (30) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
கைதான வர்த்தகர் விமான பயணத்தை மேற்கொள்ளாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் உள்ள விற்பனை நிலையத்திலிருந்து 75 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து பின்னர் விமான நிலையத்தின் “Green Channel” வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொள்வனவு செய்த வெளிநாட்டு மதுபான போத்தல்களின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபா ஆகும்.குறித்த வர்த்தகர் இறுதியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வர்த்தகர் கைதான சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!