Home » கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

by newsteam
0 comments
கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!