Home » கனடாவுக்கு 25%, சீனாவுக்கு 10% இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு

கனடாவுக்கு 25%, சீனாவுக்கு 10% இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு

by newsteam
0 comments
கனடாவுக்கு 25%, சீனாவுக்கு 10% இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு

கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

“இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது.”

“நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!