Home » கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

by newsteam
0 comments
கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

உக்ரைன் – ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்யா ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.இதற்கிடையே, அமெரிக்கா செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்துள்ளார்.அப்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா வருகிறார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!