விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன,பிள்ளையான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். அவ்வமைப்பில் இருந்து அவர் வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தபோது நான் அமைச்சுப் பதவி வழங்கவில்லை. அவ்வாறான ஒருவருக்கு எதனடிப்படையில் அமைச்சு பதவி வழங்கப்பட்டது.என பதவியை வழங்கியவரிடம் கேட்க வேண்டும். அவ்வாறு பதவி வழங்கப்பட்டமை தவறாகும்.விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி கருணாவும், பிள்ளையானும் இராணுவத்துடன் இணைந்தனர். போரை முடிப்பதற்கு இது உதவியாக அமைந்திருக்கக்கூடும்.அம்பாறையில் பிக்குகளைக் கொலை செய்தது யார்? இது அனைவருக்கும் தெரியும்.விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தனர் என தெரிவித்துள்ளார்.