Wednesday, April 16, 2025
Homeஉலகம்கழிவறை Tissue பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்த பெண் ஊழியர்

கழிவறை Tissue பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்த பெண் ஊழியர்

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.அவர் தனது பதிவில், “இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும். பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்று நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்:  கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!