Home » காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்

காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்

by newsteam
0 comments
காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்

உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறில் காதலியுடன் சேர்ந்து தந்தையை எரித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.நிகோஹான் பகுதியில் உள்ள ராமாபூர் கிராமத்தை சேர்ந்த ராமு ராவத் (44) என்ற விவசாயி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு காவலுக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை காலை, வயலில் உள்ள 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ராமுவின் மகள் ஜூலி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில் ராமுவின் மகன் தர்மேஷ் [26 வயது] விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். குடும்பத்தின் 2.5 பிகா விளைநிலத்தில் தனது பங்கை தர மறுத்ததால் தர்மேஷ் தனது 24 வயது காதலி சங்கீதாவுடன் சேர்ந்து தனது தந்தையை வயலில் வைத்து எரித்துக்கொன்றார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!