Site icon Taminews|Lankanews|Breackingnews

காலியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு பலியான மனைவி

காலியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு பலியான மனைவி

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளார்.காலியில் ஹபராதுவை – அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.அங்குலுகஹ – பிலான பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.கணவனின் தாக்குதலுக்கு உள்ளான 42 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரான கணவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version