Site icon Taminews|Lankanews|Breackingnews

காலி முகத்திடல் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

காலி முகத்திடல் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்கவை நாளையதினம் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version