கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில் , வியாழக்கிழமை (24) மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த மாணவன் கிண்ணியா குறிஞ்சாகேணியை சேர்ந்த வயது (10) மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார். பொது மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கடளினுழ் மூழ்கிய சிறுவனை மீட்டுள்ளனர்.குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் இச் சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாக தெரியவருகிறது குறித்த மற்றைய மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிர் இழந்தவரின் ஜனாசா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே பாலத்தில் படகு பாதை கவிழ்ந்ததில் எட்டு உயிர்கள் பழியாகிய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.