மனைவியை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை இரண்டாக வெட்டி, குப்பை மேட்டில் வீசியதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மருமகனை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண், டேட்புராவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான விமலாவதி(65 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபர் அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவர். கொலை செய்யப்பட்ட பெண், ஸ்டேட் புரா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஒரு மகளுடன் வசித்து வருகிறார், மற்றைய மகள் தனது கணவருடன் மேல் மாடியில் வசித்து வருகிறார், அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவருடன் கீழ் மாடியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்தப் பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், போதைப்பொருள் வாங்க வந்த 25 வயது இளைஞனுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதுவே இந்தக் கொலைக்கு முதன்மையான காரணம் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.