கிளிநொச்சி புளியம் பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட முசிரம்பிட்டி பகுதியில் பொது கிணற்றில் பாய்ந்து இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் 29 வயதுடைய சற்குணராசா பிரதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணை இந்தநிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.