Home » கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

by newsteam
0 comments
கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது.

மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.இருந்தும் இதுவரை குறித்த மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. ஆளனி இன்மையே இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர்.பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre) உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!