Home » கிளிநொச்சி மாவட்ட பாடசாலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பயிற்றுவிப்பாளர் மீது உச்ச கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – றஜீவன் எம்.பி.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பயிற்றுவிப்பாளர் மீது உச்ச கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – றஜீவன் எம்.பி.

by newsteam
0 comments
கிளிநொச்சி மாவட்ட பாடசாலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பயிற்றுவிப்பாளர் மீது உச்ச கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். - றஜீவன் எம்.பி.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர், தாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள் மீது பாலியல் தொல்லை மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி மற்றும் காணொளிகள் பெரும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் பல பெற்றோர்கள் தங்கள் ஆதங்கங்களையும் புகார்களையும் எமக்கு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பல ஆண் மாணவர்கள் குறித்த ஆசிரியரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது மாணவர்களின் மனநலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.சம்பவம் தொடர்பாக ஒரு முழுமையான, சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும்.அத்தகு சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாதவாறு, பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான நடத்தை வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிக நடவடிக்கை எடுப்பது அவசியமானவை. எனவே இது தொடர்பாக உடனடியாக செயற்படப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.உங்கள் அலுவலகம் இந்த விடயத்தை மிக முக்கியத்துடன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.என பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!