Home » கிளிநொச்சி வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலி

கிளிநொச்சி வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலி

by newsteam
0 comments
கிளிநொச்சி வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலி

கிளிநொச்சி நகரில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வீதியை கடக்க முற்பட்ட போது, கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய யோகலிங்கம் குமரேசன் எனும் முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!