Site icon Taminews|Lankanews|Breackingnews

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து,
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு,தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version