வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகள், அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது