Home » கூகுள் பிளே ஸ்டோரில் போலி கடன் செயலிகள் – எச்சரிக்கும் McAfee

கூகுள் பிளே ஸ்டோரில் போலி கடன் செயலிகள் – எச்சரிக்கும் McAfee

by newsteam
0 comments
கூகுள் பிளே ஸ்டோரில் போலி கடன் செயலிகள் - எச்சரிக்கும் McAfee

டவுன்லோடு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை போலி செயலிகள் வாயிலாக திருடப்பட்டு உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.டவுன்லோடு செய்வதால் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக எச்சரித்துள்ளது.McAfee எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் போலியான கடன் செயலிகள் உலா வருவது தெரியவந்துள்ளது.McAfee நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் படி வெளியிட்டுள்ள செய்தியில், உலகிலேயே போலியான செயலிகளை டவுன்லோடு செய்யக்கூடிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

அதன்படி, பிளே ஸ்டோரில் Rapidfinance, Prestamo Seguro- Rapido seguro உள்ளிட்ட 15 கடன் போலி செயலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் இந்த 15 கடன் போலி செயலியை 8 மில்லியன் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. டவுன்லோடு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை போலி செயலிகள் வாயிலாக திருடப்பட்டு உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த செயலிகளை டவுன்லோடு செய்வதால் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக எச்சரித்துள்ளது.ஒருவேளை இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்து விட வேண்டும் என்று பொதுமக்களுக்கு McAfee நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode