யாழ்ப்பாணம் கண்டி ஏ 09 பிரதான வீதியின் கெக்கிராவ எலகமுவ வயல் பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டியொன்றினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
கெக்கிராவ எலகமுவ வயல் பகுதியின் மஸ்தான் பாலத்திற்கு அருகிலுள்ள கால்வாய் பகுதியில் தனிமைப்பட்டிருந்த ஆறுமாத வயதுடைய யானைக் குட்டியினையே இன்று (14) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.கெக்கிராவ எலகமுவ வயல்பகுதி ஊடாக பிரதான வீதியினை கடந்து யானைக் கூட்டம் கலாவெவ குளத்துப் பகுதிக்கு நேற்று (13) இரவு நேரத்தில் சென்றிருந்த வேளை யானைக் கூட்டம் மற்றும் தாய் யானையிடம் இருந்து பிரிந்திருந்த யானைக் குட்டியினை பிரதேச வாசிகள் சிலர் கட்டிவைத்து விட்டு கெக்கிராவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் யானைக் குட்டியினை கொண்டு வந்துள்ளனர்.மேலும், யானைக்குட்டிக்கு சிகிச்சையளித்து பராமரிப்பதற்கான வேண்டி வடமேல் மாகாண வனஜீவராசிகள் திணைக்கள நிக்கவரெட்டிய மிருக வைத்தியர் அலுவலக வைத்தியர்களிடம் கையளிப்பதற்காக வேண்டி யானைக் குட்டியை எடுத்துச் செல்லவுள்ளதாக விஜித்தபுர அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கெக்கிராவ எலகமுவ வயல் பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டி மீட்பு
30