கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இறந்தவர் 45 வயதுடைய தினேசன் செல்வராஜ் என்பவராவார்.சந்தேக நபரான 85 வயதான மாமாவிற்கு மருமகனிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மருமகனின் தலை மற்றும் நெஞ்சில் மாமா தாக்கியுள்ளார்.இதனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தெஹியோவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விருந்தார்.என தெரிவித்த தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.