Site icon Taminews|Lankanews|Breackingnews

கொழும்புவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு

கொழும்புவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு

வெள்ளவத்தை, ராம கிருஷ்ணா பிளேஸில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா (59) ஆவார். இவர் மட்டக்களப்பு இருதய புரத்தைச் சேர்ந்தவர்.வெள்ளவத்தை ராம கிருஷ்ணா பிளேஸ் வணிக இல்லத்தில் காவலாளியாகவும், வீட்டுப் பணியாளராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் மரக் கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​ திடீரென கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version