Thursday, April 24, 2025
Homeஇலங்கைகொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா நீதிமன்றில் சரணடைந்தார்

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா நீதிமன்றில் சரணடைந்தார்

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.இன்று (24) அவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.மேற்படி, முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இந்த வழக்கில் 9ஆவது சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழ் நகைக்கடை பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!