Home » கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு – கிராமசேவையாளரின் சகோதரன் பெயரில் மோசடி வழக்கு

கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு – கிராமசேவையாளரின் சகோதரன் பெயரில் மோசடி வழக்கு

by newsteam
0 comments
கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு – கிராமசேவையாளரின் சகோதரன் பெயரில் மோசடி வழக்கு

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும், ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.இது தொடர்பில் ஏமாந்த நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!