மகாராஷ்டிராவில் 7 ஆம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டவுண்ட் டெசில் [Daund Tehsil] பகுதியில் செயல்பட்டுவரும் செயின்ட். செபாஸ்டின் ஆங்கில வழி தனியார் பள்ளியில் 2 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 ஆம் வகுப்பு மாணவன் அவனது ரிப்ரோட் கார்டில் திருட்டுத்தனமாகப் பெற்றோரின் கையெழுத்தை போடுவதை அதே வகுப்பில் படிக்கும் சிறுமி பார்த்துள்ளார். இதனை சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய சொல்லி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனிடம் அதற்கு கட்டணமாக 100 ரூபாய் கொடுத்துள்ளான். ஆனால் அந்த மூத்த மாணவன் இந்த திட்டத்தை பள்ளி நிர்வாகத்திடம் சென்று சொல்லியுள்ளான்.விஷயம் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பல முறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது. சிறுவனை கண்டித்து அனுப்பிவிட்டோம் என பூசி முழுகியுள்ளது. இதனால் பெற்றோர் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி போலீசிடம் சென்றுள்ளனர். நீண்ட தாமதத்திற்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை[ஜனவரி 26] போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலைக்கு திட்டம் தீட்டிய சிறுவனுக்கு இன்னும் 12 வயது ஆகாததாலும், சிறார் நீதிச் சட்டம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையை அனுமதிக்காததாலும் அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய ரூ.100 கொடுத்து ஆள் செட் செய்த 7 ஆம் வகுப்பு சிறுவன்
16