Site icon Taminews|Lankanews|Breackingnews

சங்குப்பிட்டி பெண் கொலையில் இருவர் கைது; ஒருவர் பெண்

சங்குப்பிட்டி பெண் கொலையில் இருவர் கைது; ஒருவர் பெண்

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது 36) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தெரியவந்தது.இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்க அமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version