Home » சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிப் பிரயோகம்

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிப் பிரயோகம்

by newsteam
0 comments
சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிதாரி பயன்படுத்தியதாக கூறப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி நீதிமன்றத்தில் வைத்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கணேமுல்ல சஞ்சீவ’ 2023 ஆம் ஆண்டு நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!