Home » சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்

by newsteam
0 comments
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், விநாயகபுரம், உமிரி, திருப்பதி, ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூபா 600,000 பெறுமதியான அத்தியவசிய உலருணவு பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அராலி மத்தி, அராலி தெற்கு பகுதிகளை சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட 29 குடும்பங்களுக்கு ரூபா 116,000 பெறுமதியான உலருணவு பொருட்கள், கடந்த சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்

You may also like

Leave a Comment

error: Content is protected !!